1. செய்திகள்

பாக்கெட் உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து

T. Vigneshwaran
T. Vigneshwaran
Food Producers

பாக்கெட் உணவுப்பொருட்களின் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி, முகவரி, தரச்சான்றிதழ் எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாவிட்டால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் லேபிள் ஒட்டும்போது அதில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பெரும்பாலான நிறுவனங்கள் முறையாகக் குறிப்பிடுவதில்லை. மேலும், சைவ, அசைவ குறியீடும் முறையாக இடம் பெறுவதில்லை என்ற குற்றச்ட்டு அவ்வப்போது எழுகிறது. இதனால் எத்தனை நாட்கள்வரை உணவை பயன்படுத்த முடியும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. இதனால், காலாவதியான பொருட்களை பயன்படுத்தும்போது வாந்தி, பேதி, காய்ச்சல் உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது குறித்து உணவுப்பொருள், தின்பண்ட தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பாக்கெட்டில் ஒட்டப்படும் லேபிளில் 16 வகையான விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அரசின் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த லேபிளில் உற்பத்தி, காலாவதி தேதி, சத்துக்கள் விவரம், முகவரி, தரச்சான்றிதழ் எண், இறக்குமதி செய்த உணவின் உற்பத்தி நாடு உட்பட 16 விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், அரைகுறை தகவல்களைக் கொண்ட லேபிளை மாற்றியமைத்து முழுமையான தகவல்களை தர வேண்டியது உணவு தயாரிப்பாளர்களின் கடமை. பொருட்களை வாங்கும்போது நுகர்வோரும் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, முகவரி உட்பட அனைத்து விபரங்களளை சரிபார்த்து கவனிக்க வேண்டும். முழு தகவல் இல்லாதபட்சத்தில் மாவட்ட வருவாய் அலுவலக நீதிமன்றம் மூலம் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மதுரை உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் லேபிள் மேளா நடத்தப்பட இருப்பதாகவும், லேபிளில் முழுமையான தகவல்கள் இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்க புகார் தெரிவிக்கலாம் எனவும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

திருப்பதியில் ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி

விவசாயிகளை நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி

English Summary: A risk to packet food producers Published on: 17 September 2022, 09:28 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.