1. செய்திகள்

வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை

KJ Staff
KJ Staff
Pan Card and Aadhar Card

மத்திய அரசு விரைவில்  ஆதாரை கட்டாயமாக்க உள்ளது. அனைத்து விதமான வங்கி பரிவர்தனைகளுக்கும் ஆதார் எ ண்,  கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பண பரிவர்த்தனையை வரைமுறை செய்யும் பொருட்டு அதிக பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கும் ஒரு சில விதிமுறைகளை  கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் வைப்பு செய்தால், பான் எண் கட்டாயம் வேண்டும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இருப்பினும் போலியாக பான் எண் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் தெரிவித்தல் கட்டாயமாக்க பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த உள்ளது.

Cash Deposits

தற்போது வங்கியில் வைப்பு தொகைக்கான வரம்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வராத நிலையில் ஆண்டுக்கு ₹ 20 லட்சம் - ₹ 25 லட்சம் வரை பணம் வைப்பு செய்பவர்களுக்கு ஆதார் எண் மற்றும் பான் எண்  போன்றவற்றை நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எ ண்,  கை ரேகை பதிவுகளும் பணம் யாரால் வைப்பு செய்ய படுகிறது என்பதை என்று கண்டறியவும், கருப்பு பணத்தை  பெருமளவில் கட்டுப்படவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்க படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Aadhar Authentication Is Mandatory : Those Who Deposit Or withdrawal Above 20 - 25 Lakh Annual Transaction Published on: 02 August 2019, 01:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.