1. செய்திகள்

164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Admission open in 164 Tamilnadu Govt Arts and Science Colleges

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான (2023-2024) மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பித்தல், கலந்தாய்வு, கல்லூரி வகுப்பு தொடங்கும் நாட்கள் என வெளியிடப்பட்டுள்ள முழுத்தகவலின் விவரங்கள் பின்வருமாறு-

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரம்:

(ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்) விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/-  மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2/-

SC/ST- பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 15” என்ற பெயரில் 08/05/2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் சந்தேகம் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்புக்கொள்ள வேண்டிய எண் - 1800 425 0110.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நாட்கள் பின்வருமாறு-

  • விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் (இணையதளம்)- 08.05.2023
  • விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் (இணையதளம்)- 19.05.2023
  • தரவரிசை பட்டியல் கல்லூரிக்கு அனுப்பப்படும் நாள்- 23/05/2023
  • சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாட்கள் - 25/05/2023 முதல் 29/05/2023 (மாற்றுத்திறனாளிகள் மற்றும் Sports/Ex-serviceman)
  • முதல் பொது கலந்தாய்வு நாட்கள்: 30/05/2023 முதல் 09/06/2023
  • இரண்டாம் பொது கலந்தாய்வு: 12/06/2023 முதல் 20/06/2023
  • முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும் வகுப்புகள் துவங்கும் நாள்: 22/06/2023

சில தினங்களுக்கு முன்னர் தான் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

B.E / B.Tech / B.Arch  முதலாமாண்டு பயில விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org  or https://www.tndte.gov.in  என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.06.2023.

pic courtesy: https://www.gacwrmd.in/

மேலும் காண்க:

B.E, B.Arch படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்- விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Admission open in 164 Tamilnadu Govt Arts and Science Colleges Published on: 06 May 2023, 11:14 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.