1. செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி புதிய அறிவுப்பு: ஆந்திரா அரசு விவசாக்கிகளுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு

KJ Staff
KJ Staff

ஆந்திரா  முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி  பதவி ஏற்ற பின் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது செயல் பாடுகள் பலராலும் பாராட்ட பட்டு வருகிறது. 5 துணை முதல்வர்களை அறிவித்த பின், தற்போது விவசாகிகளுக்காக உதவித்தொகையை அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதியின் போது வேளாண் மற்றும் வேளாண் சார்த்த தொழில்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க படும் என்றிருந்தார். அதன்படி தற்போது விவாசகிகளுக்கு வருடத்திற்கு ரூ12,500/-  வழங்க உத்தரவு வழங்கி உள்ளது. இத்திட்டமானது வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமுல் படுத்த உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 62% மக்கள் வேளாண் மற்றும் வேளாண் சார்த்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நிரந்தர வருவாயினை பெறும் வகையில் திட்டமானது அறிவிக்க பட்டுள்ளது.

விவசாகிகளுக்கான திட்டங்கள்

  • இலவச பயிர் காப்பீடு திட்டம்
  • விவாசகிகளுக்கு வட்டி இல்ல கடன்
  • போலியான விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியன தடை செய்யப்படும். தயாரிக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க படும். தேவைப்படும் பட்சத்தில் மாநில அரசு புதிய சட்டம் கொண்டு வரும்.
  • விவசாகிகளின் விளை பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயம் என பல திட்டங்களை அறிவித்துள்ளது.

 

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Andhra Pradesh Government Announced New Scheme For Farmers: Y. S. Jaganmohan Reddy Offering Monetary Support

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.