1. செய்திகள்

இடைத்தரகர் இன்றி விவசாயிகளும் வர்த்தகம் செய்ய உதவும் மசோதா- மக்களவையில் தாக்கல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Bill to help farmers and farmers trade without intermediaries! Filed in the Lok Sabha

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 3 மசோதாக்கள் (Bill) நாடாளுமன்றத்தின் (Parliament) மக்களவையில் (Lok sabha) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மசோதாக்கள் தாக்கல் (Bill)

2020 ஜூன் 5ம் பிரகடனம் செய்யப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக மசோதாக்களை சட்டமாக மாற்றுவதற்காக மக்களவையில் இந்த 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அவை

  • விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020

  • விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020

  • அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 

  • முதல் இரண்டு மசோதாக்களை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய சபாநாயகரிடம் அனுமதி கோரிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாவின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விவசாயப் பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றார்.

விவசாயிகளும், வர்த்தகர்களும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாகவும் சுதந்திரமாக வியாபாரத்தில் ஈடுபடும் சூழலை இந்த மசோதா ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கான மின்னனு வர்த்தக கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் எந்த மாநில வியாபாரிகளுடனும் தடையின்றி வர்த்தகம் செய்ய முடியும்.

மேலும் படிக்க...

நஷ்டம் இல்லாத விவசாயத்திற்கு வழிவகுக்கும் துணைத் தொழில்கள் - ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தின் வெற்றி ரகசியம்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை கொட்டும் - விபரம் உள்ளே!!

 

English Summary: Bill to help farmers and farmers trade without intermediaries! Filed in the Lok Sabha Published on: 16 September 2020, 10:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.