1. செய்திகள்

அரசு பேருந்துகளில் 9ம் தேதி முன்பதிவுக் கட்டணம்-பிடித்தமில்லாமல் வழங்கப்படும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: Dailythanthi

ஒமிக்ரான் பரவல் அதிகரித்திருப்பதைக் கருத்தில்கொண்டு, ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்படும் 9-ந் தேதி அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்  தொற்றுப்பரவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள்தோறும் இந்தத் தொற்றுப்பரவலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு (Ticket booking)

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசின் இந்த திடீர் அறிவிப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியூர் செல்லத்திட்டமிட்டு அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பலவித சந்தேகங்களை எழுப்பியது.

கட்டணம் (Fee)

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வரும் 9-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்துகளில் பயணம் செய்ய 1,218 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுடையக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப பேருந்துகள் (Special buses)

அதேநேரத்தில் வரும் 10 ஆம் தேதிக்குப் பிறகு அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்ப பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கும், பிற ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் செல்லத்திட்டமிட்டு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பவர்களும், தங்களுக்கும் செலுத்தியக் கட்டணம் திரும்பக் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். எனவே அந்த அறிவிப்பும் வெளியிடப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க...

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தொடர்புக்கு

பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

English Summary: Booking on Government buses on the 9th will be free of charge! Published on: 07 January 2022, 08:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.