1. செய்திகள்

கேஜே சௌபாலுக்கு பிரேசிலிய விவசாய இணைப்பாளர் அழைப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Brazilian Agricultural Co-ordinator called at KJ Choupal!

விவசாயம் மற்றும் விவசாயிகளின் பார்வையில் விவசாயத் துறையில் மேலும் மேலும் முன்னேற்றத்திற்காக 26 ஆண்டுகளாக கிரிஷி ஜாக்ரன் பணியாற்றி வருகிறது. விவசாயம் குறித்து விவாதிக்க, விவசாயத் துறையில் செயல்படும் வல்லுநர்கள் அழைத்து அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது, கிரிஷி ஜாக்ரன்.

இந்த முயற்சியைத் தொடர்ந்து,பிரேசில் தூதரகத்தின் விவசாய இணைப்பாளர், கிருஷி ஜாக்ரன் குடும்பத்தில் இணைந்ததால் விவசாய விழிப்புணர்வு அமைப்புக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் என பாராட்டினார். கிருஷி ஜாக்ரன் குடும்பத்தில் இணைந்ததற்கு மிக்க மகிழ்ச்சியை தெரிவத்த அவர், அழைப்புக்கு அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார், மேலும் அவர் விவசாயத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இருப்பினும், பிரேசிலிய சமூகத்தைச் சேர்ந்த இந்த உறுப்பினர், நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எப்போதும் பங்களிக்க முயற்சிக்கும் கிருஷி ஜாக்ரனின் அமைப்பு மற்றும் ஆசிரியரான எம்.சி. டொமினிக் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். இன்று, பிரேசிலிய தூதரகத்தின் இரண்டு உறுப்பினர்கள், அதாவது ஏஞ்சலோ (விவசாய இணைப்பு - பிரேசிலின் விவசாயம், கால்நடைகள் மற்றும் உணவு வழங்கல் அமைச்சகம்) மற்றும் ஃபிராங்க் (உளவுத்துறை பிரேசிலின் தூதரகம்) இணைத்துள்ளது என்று கூறினால், அது மிகையாகது. கிரிஷி ஜாக்ரன் உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர் . கிரிஷி ஜாக்ரன் தலைமை ஆசிரியர் மற்றும் நிறுவனர் எம்.சி.டோமினிக் வரவேற் உரையாற்றினார். நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க உதவிய அமைப்பின் மற்ற மூத்த ஊழியர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க: 20 சதுர அடி பரப்பளவில் தக்காளி மாடித் தோட்டம் அமைக்க: இதோ வழிமுறை!

இவ் ஊடகங்கள் உண்மையிலேயே ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது என்றார். மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடும் போது கிருஷி ஜாக்ரன், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கான பணிகளுக்கு வழிவகுக்கிறது, இது மிகவும் பாராட்டத்தக்க பணியாகும். உழவர் சகோதரர்களின் நலனுக்காக இப்பணியைச் செய்த கிருஷி ஜாக்ரனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இப்போது விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர், இதையெல்லாம் ஊடகங்கள் விவசாயிகளிடம் சென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி அவர்களிடம் பேசி, தகவல்களைப் பெறுங்கள். நிபுணர்களை தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய பழ பண்ணை: மிக விரைவில் சுற்றுலா தளமாக மாறும்

புதிய டிரைவிங் லைசென்ஸ் வாங்க, இனி RTO-வை சுற்றி வர வேண்டியதில்லை!

English Summary: Brazilian Agricultural Co-ordinator called at KJ Choupal! Published on: 16 May 2023, 05:38 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.