Krishi Jagran Tamil
Menu Close Menu

காவேரி டெல்டா மாவட்டங்கள் வறட்சி: விவாசகிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி: கருகும் நெற்கதிர்கள்

Saturday, 27 April 2019 06:05 PM

உலகிற்கே சோறு அளித்த நாடு,  'சோழ வளநாடு' என்பதாகும். இன்று நீர் இல்லாததால் காவேரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகியுள்ளது.

 காவேரி டெல்டா மாவட்டங்கள் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மழை மற்றும் நீராதாரங்கள் அனைத்தும் பொய்த்து விட்டன. விவாசகிகள் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளாக மழை குறைத்து விட்டது. நிலத்தடி நீரினை நம்பி அறுவடை செய்து வந்தோம். இப்போது நிலத்தடி நீரும் வற்றி விட்டது. நெற் கதிர்கள் நீர்  இல்லாமல் மடிந்து போகும் தருவாயில் உள்ளன என்றார்.

பல ஆண்டுகளாக நெல் பயிரிட பட்டு வருகிறதுசுழற்சி முறையில் ஜனவரி முதல்  ஜூன் மாதம் வரை பயறு வகைகள் பயிரிட படுகின்றன. இந்தாண்டு கஜா புயலினால் பெரும்பாலான விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயாராகி இருந்த பயிர்கள், தென்னை மரங்கள் என எல்லாவற்றையும்  பதம் பார்த்து விட்டு சென்றுள்ளது இந்த கஜா புயல்.

நீர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகையில், நிலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்ட வருவதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். முதலில் இருக்கும் நீர் நிலைகளில் தூர்வார பட வேண்டும். நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்முன்னோர்கள் விட்டு சென்ற ஏரிகள், குளங்கள், அணைகள் என அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும், என கூறினார்.

   காவேரி டெல்டா பகுதியினை சுற்றியுள்ள 24 மாவட்டங்கள் வறட்சி மிகுந்த மாவட்டங்களாக அறிவிக்க பட்டுள்ளன. அரசு 1200  கோடி இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் விவசாக்கிகளுக்கு 2000 ரூபாய் என அறிவித்துள்ளது. மேலும் அரசு காவேரி மேலாண்மை குழு அமைத்து அவர்களது பிரச்னைக்கு ஒரு முடியு எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டம்

பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசினால் அறிமுக படுத்த பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி ஃபஸல் பிம யோஜனா'   என்ற திட்டம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகதுடன் தொடர்புடையது. பயிர் காப்பீடு திட்டம் மூலம் பெரும்பாலான விவாசகிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.   

drought, cauvery, farmers, delta, paddy, shortfall, crop insurance , sanction
English Summary: cauvery delta running water shortage

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!
  2. காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு திட்டம்!!
  3. வெறும் 12 ரூபாயில், ரூ.2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு பெற விருப்பமா? - விபரம் உள்ளே!
  4. கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!
  5. ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் - மானாவாரி விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கும் தமிழக அரசின் திட்டம் -பெறுவதற்கான வழிமுறைகைள்!
  7. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு - வானிலை மையம்!!
  8. மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் - வெளியீடு இன்று தொடங்குகிறது!
  9. மண்பாண்டங்களின் மகத்துவங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம் உங்கள் கையில்
  10. 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.