1. செய்திகள்

பருப்பு விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! : ஒருங்கிணையும் மத்திய - மாநில அரசுகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பருப்பு விலைகள் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பருப்புகளின் இருப்பை கண்காணிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பருப்பு விலைகள் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மக்களுக்கு நியாயமான விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, அத்தியாவசியப் பொருட்களை கண்காணிக்கும் நுகர்வோர் விவகாரத்துறை, பருப்புகளின் இருப்பை கண்காணிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 

இருப்புகளை தெரிவிப்பதற்கான உத்தரவுகள்

அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கடந்த 1978ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி பருப்பு மில்கள், வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், தங்களின் இருப்பு விவரத்தை தெரிவிக்க உத்தரவிடும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த மே 14ம் தேதி கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் பருப்புகளின் விலையை கண்காணிக்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

பருப்புகளை பதுக்குவதன் மூலம் சந்தையில் விலை ஏற்றப்படுகிறது. இந்த விரும்பத்தகாத நடைமுறையை தடுக்க, நாடு முழுவதும் பருப்புகளின் இருப்பு நிலவரத்தை அவ்வப்போது தெரிவிக்கும் அணுகுமுறை முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை எளிதாக்க ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆன்லைன் மூலம் பருப்பு இருப்பு நிலவரங்களை தெரிவிக்கும்படி கடந்த மாதம் 17ம் தேதி நடந்த காணொலி காட்சி கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

கொள்முதல் அதிகரிப்பு

பருப்புகளின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய, பருப்பு கொள்முதல் இலக்கு இந்த நிதியாண்டில் பராமரிக்கப்படவுள்ளது. விலை நிலைப்பாடு நிதியின் கீழ் இந்த அளவு 23 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படவுள்ளது. சுண்டல், மைசூர் பருப்பு, பாசி பயிறு ஆகியவற்றின் கொள்முதல் நடைபெற்று வருகிறது. பருப்பு கொள்முதல் நடவடிக்கையில் மாநில அரசு அமைப்புகளுடன் இணைந்து நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (NAFED) ஈடுபட்டுள்ளது.

பல்வேறு நலத்திட்டங்கள், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் பருப்புகள் வழங்கப்படுகின்றன. பொது விநியோக திட்டம், மதிய உணவு திட்டம், ஐசிடிஎஸ் திட்டங்கள் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து அரசுத் துறைகள் பருப்புகளை பயன்படுத்துகின்றன. பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு, மத்திய அரசு பருப்புகளை வழங்குகிறது. 2020-21ம் ஆண்டில் 1.18 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் 14.23 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சில்லரை விற்பனையில் தலையீடு

பருப்புகளின் சில்லரை விற்பனை விலைகளை குறைக்க, மத்திய தொகுப்பிலிருந்து பருப்புகளை வழங்கும் முறை கடந்த 2020-21ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி பாசி பயறு, உளுந்து மற்றும் துவரை ஆகியவை மாநிலங்களின் கூட்டுறவு அமைப்புகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன

மேலும் படிக்க....

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வெங்காய விதை வினியோகம்!

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் புதியத் திட்டங்கள்!

English Summary: Central and State Governments coordinate actions to contain the prices of pulses Published on: 19 June 2021, 04:09 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.