1. செய்திகள்

பயங்கரவாதிகள் உபயோகித்த 14 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Deiva Bindhiya
Deiva Bindhiya
Central government bans 14 mobile apps used by terrorists in Kashmir
Central government bans 14 mobile apps used by terrorists in Kashmir

புலனாய்வு அமைப்புகளின் உள்ளீடுகளைப் பெற்ற பிறகு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 14 மெசஞ்சர் மொபைல் பயன்பாடுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த செயலிகளில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்டவை அடங்கும் என்று ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஆதாரங்களின்படி, இந்த மொபைல் பயன்பாடுகள் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளால் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தள நிலவரத்தில் ஆதரவுகளை வழங்குவோரை தொடர்புக்கொள்ள பயன்படுத்தப்பட்டது (OGW).

"ஓவர்கிரவுண்ட் வார்க்கர்ஸ் (OGWs) மற்றும் பயங்கரவாதிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் சேனல்களை தொடர்ந்து ஏஜென்சிகள் கண்காணித்து வந்தன. தகவல்தொடர்புகளில் ஒன்றைக் கண்காணிக்கும் போது, மொபைல் பயன்பாட்டிற்கு இந்தியாவில் பிரதிநிதிகள் இல்லை மற்றும் செயலி அதாவது ஆப் மூலம் பரிமாறப்படும் செய்திகள் மூலம் நடப்பதைக் கண்காணிப்பது கடினம் என்று ஏஜென்சிகள் கண்டறிந்தன" என ANI அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை, பள்ளத்தாக்கில் செயல்படும் பிற புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் இந்திய சட்டங்களைப் பின்பற்றாத இதுபோன்ற பயன்பாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, இந்த மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி மேலும் கூறினார்.

மேலும் படிக்க: இப்போது உங்கள் WhatsApp கணக்கில் 4 சாதனங்களை இணைக்கலாம்!

உயர் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ தகவல்களில், இந்த செயலிகள் பள்ளத்தாக்கில் பயங்கரவாத பிரச்சாரத்தை பரப்புவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.

ஐடி அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட 14 பயன்பாடுகளின் பட்டியல் இதோ:

  • Crypviser
  • Enigma
  • Safeswiss
  • Wickrme
  • Mediafire
  • Briar
  • BChat
  • Nandbox
  • Conion
  • IMO
  • Element
  • Second line
  • Zangi
  • Threema

அரசின் இந்த நடவடிக்கை முதல் முறையல்ல. முன்னதாக, பல சீன பயன்பாடுகளை அரசு தடை செய்தது.

இதுவரை சுமார் 250 சீன ஆப்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

Pic Courtesy: Pexels/krishijagran

மேலும் படிக்க:

இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இப்போது உங்கள் WhatsApp கணக்கில் 4 சாதனங்களை இணைக்கலாம்!

English Summary: Central government bans 14 mobile apps used by terrorists in Kashmir Published on: 01 May 2023, 11:46 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.