1. செய்திகள்

குழந்தைகள், முதியோர்கள் இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Children, and the elderly should avoid going out during the afternoon

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

3 டிகிரி வரை உயர்ந்த வெப்பநிலை:

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (15.05.2023) 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 2° முதல் 3° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், அதிகப்பட்சமாக வேலூரில் 41.5°C பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கரூர், பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 2°- 3° C அதிகரித்து 40°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 2° முதல் 3° C கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் சார்பில்  கேட்டுக் கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

கோடைகால கடுமையான வெப்பத்தினால் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை:

  1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
  3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
  4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.
  5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.
  6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
  7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணிவதுடன் குடையினையும் கொண்டு செல்லவும்.
  8. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை:

  1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.
  2. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தின் விளைவால் பல்வேறு இடங்களில் HEATWAVE எனப்படும் வெப்ப அழுத்தம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்சி மையம் ஏற்கெனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pic courtesy: unsplash

மேலும் காண்க:

5 லட்சம் மலர்களில் பொன்னியின் செல்வன் கப்பல்- வண்டியை ஏற்காடுக்கு விடுங்க..

English Summary: Children should avoid going out during the afternoon says IMD Published on: 16 May 2023, 01:00 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.