1. செய்திகள்

கொரோனா 2வது அலை: கால்நடை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனா 2வது அலை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளின் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி கல்லூரிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

கால்நடை கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று

தஞ்சை மாவட்டத்தில் 13 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயின்ற மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இதுவரை 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் கடந்த 23-ம் தேதி 430 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த கல்லூரி மாணவர்கள் 19 பேர் மற்றும் 1 விடுதி பெண் உதவியாளர் என 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 20 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளி கல்லூரிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேராளா மாநிலத்திலும் கொரொனோ தொற்று தமிழகத்தை விட அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிடிக்க...

தடுப்பூசிகளின் பயன்பாட்டால் 2022-க்குள் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பலாம் - பில்கேட்ஸ் கருத்து!!

18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா - கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: Corona 2nd wave in Tamilnadu affects 19 Veterinary Research College students in Thanjai

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.