1. செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! நிலவரம் என்ன?

T. Vigneshwaran
T. Vigneshwaran

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கியது. அதன்பிறகு புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. மே 21ஆம் தேதி யாரும் யூகிக்கமுடியாத வகையில் 36,184 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் பாதிப்புகளை விட 300 முதல் 400 வரை எண்ணிக்கையில் காரோண தொற்று சரிந்து வருகிறது.

அதிகரித்த பாதிப்புகள்

இந்நிலையில் நேற்று முன்தினம்  4,506 என்ற அளவில் இருந்த பாதிப்புகள், நேற்று 4,512 புதிய தொற்று காணப்பட்டது. அதாவது வித்தியாசம் வெறும் 6 என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் புதிய பாதிப்புகள் எதுவும் அதிகரிக்காமல் அதே எண்ணிக்கையில் பதிவாகி இருப்பது ஒரு நிம்மதியான விஷயம். இதன்மூலம் மொத்த பாதிப்புகள் 24,79,696 ஆக பெருகியுள்ளது. நேற்று 5,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,08,886 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 113 பேர் இறந்ததையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 32,619ஆக அதிகரித்துள்ளது. தற்போது 38,191 பேருக்கு கொரோனா சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக மீண்டும் பாதிப்புகள் அதிகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. இது ஊரடங்கு கட்டுப்பாடுகளை அலர்ச்சியமாக மக்கள் எடுத்துக்கொண்ட காரணத்தின் விளைவு தான் என்று கருதப்படுகிறது. இதேநிலை வரும் நாட்களில் நீடித்தால் ஜூலை 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஊரடங்கில் தளர்வுகள் இல்லாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தபடி, பாதிப்புகள் அதிகரித்தால் ஊரடங்கு அமலாக்கப்படும், அப்படி அனால் அதில் ஆச்சர்யம் படும் அளவிற்கு எதுவும் இல்லை.

எனவே பொதுமக்கள் நிலைமையை புரிந்து, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தாமல் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக கொரோனாவின்  மூன்றாவது அலை விரைவில் வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அது இரண்டாவது அலையை விட மிக மோசமாக இருக்கக்கூடும் என்றும், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் மூன்றாவது அலை வராமல் தவிர்க்கும் வகையில் தமிழக மக்கள் கவனமாக இருப்பது தான் சரி என்பதே பலரின் கருத்து.

மேலும் படிக்க:

ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!

LPG Price Today: 850 ரூபாயாக உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை , அதிர்ச்சி அடைந்த மக்கள்!

கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலர் உதவி

 

English Summary: Curfew again in Tamil Nadu! What is the situation?

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.