Krishi Jagran Tamil
Menu Close Menu

திரவ வடிவில் பொட்டாஷ் உரம்! - கடலூர் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கள்!

Friday, 20 November 2020 04:25 PM , by: Daisy Rose Mary

கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில், பொட்டாஷ் உரத்தை திரவ வடிவில் மாற்றி தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் அங்கக மற்றும் அனங்கக பொருட்கள் உரம் என்று அழைக்கப்படுகிறது. பயிா் வளா்ச்சிக்குத் தேவையான பெரும்பாலன உரங்களை ரசாயன உரங்களாகவே பயன்படுத்தி வருகிறோம். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், மண்புழு ஆகியவற்றுக்கும் தீங்கு ஏற்படுகிறது. மண் வளமும் கெட்டுப்போகிறது.

ராசாயன உரங்ளுக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலிருந்து பல்வேறு உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பயிர் வளர்ச்சிக்கு முக்கிய தேவையான பொட்டாஷ் உரத்தை திரவ வடிவில் தயாரித்து கடலூர் வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக கடலூா் வேளாண் உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறுகையில், கடலூா் உயிரி உர உற்பத்தி நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமெரிக்காவிலிருந்து ஒரு கருவி வாங்கப்படுள்ளதாக தெரிவித்தார். இந்த கருவி மூலம் பொட்டாஷ் உரம் திரவ வடிவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திரவ உரம் 24 மாதங்கள் வரை பயன்படுத்த கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.பொட்டாஷ் (திட - திரவ) உரம் வேறுபாடு

சுமார் 60 ஆயிரம் லிட்டா் பல்வேறு உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு கடலுாா், நாகை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

திரவ வடிவ பொட்டாஷ் உரம் ஏக்கருக்கு 250 மி.லி. பயன்படுத்தினாலே போதுமானது. ஒரு லிட்டா் திரவ பொட்டாஷ் உரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொட்டாஷ் உரமாக இருந்தால், ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை மூட்டை பயன்படுத்த வேண்டியிருக்கும். மூட்டை ரூ.900-க்கு விற்பனையாகிறது.

இது தொடா்பான கூடுதல் தகவல்களை, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்றும் பூவராகவன் கூறினாா்.

மேலும் படிக்க..

சொட்டுநீர்ப் பாசன திட்டங்களை ஊக்குவிக்க ரூ.3,971.31 கோடி மானிய கடன்: தமிழகத்துக்கு ரூ.1357.93 கோடி ஒப்புதல்!!

தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!

பொட்டாஷ் உரம் Potassium fertilizer Liquid Bio-Fertilizers திரவ உரம் தயாரிப்பு திரவ வடிவில் பொட்டாஷ் உரம்
English Summary: Department of Agriculture converted potash fertilizer into liquid form and distributed to farm in Cuddalore District

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
  2. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
  3. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
  4. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
  5. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
  7. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
  8. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
  9. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
  10. PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.