1. செய்திகள்

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்! வேளாண் துறை வேண்டுகோள்!

KJ Staff
KJ Staff
Summer Farming
Credit : Daily Thandhi

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் விவசாயம் ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 251.45 மி.மீ. மழை பெய்தது. இதனால் பூமியில் ஈரத்தன்மை (Moisture) இன்னும் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு (Summer Farming) செய்ய வேண்டும். இதனால் மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், முட்டைகள் அழிக்கப்படும். படைப்புழுவின் வாழ்க்கை சுழற்சிக்கு துணையாக உள்ள களை செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படும். கோடைமழை நீரும் மண்ணில் சேமிக்கப்படும். இதனால் மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும். கோடை உழவினால் மண்ணின் மேல்பகுதியில் உருவாகும் புழுதி படலம் பங்குனி, சித்திரை மாத கோடை வெயில் வெப்பம் பூமிக்குள் செல்லாமல் தடுக்கிறது.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கோடை உழவால் மண்ணில் ஈரப்பதம் (Moisture) பாதுகாக்கப்படும். கோடை மழை நீர் வழிந்தோடாமல் வயலில் தேங்கும். மண்ணின் இறுக்கம் தளர்ந்து இலகுவாக மாறும். இந்த கோடை உழவின்போது ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். எனவே விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார். கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய்ப் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறுசேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை அறியச் வேண்டி தருணம் இது!

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திப் பணிகள் தீவிரம்! தினசரி வேலையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

English Summary: Farmers need to do summer farming! Department of Agriculture Request! Published on: 12 April 2021, 07:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.