1. செய்திகள்

முடிவில்லாமல் செல்கிறது விவசாயிகள் போராட்டம்! நாடு முழுவதும் விவசாயிகள் கறுப்புக் கொடி ஏற்றினர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Farmers Protest

Credit : Daily Thandhi

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்த 3 வேளாண் சட்டங்களுக்கு (3 Agri Bills) பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.

கறுப்பு தினம்

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று (26 ஆம் தேதி) கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தங்களது 'கறுப்பு நாள் (Black Day)' போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக மூன்று எல்லைப் புள்ளிகளான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் கறுப்புக் கொடிகள் (Black flags) ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர். அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச கிராமங்களிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன, மேலும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடிகளை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:- விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வரப்போகிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. காலை 9 முதல் 10 மணிக்குள் தொடங்கி, நண்பகல் 12 மணி வரை தொடரும் போராட்டத்தில் அனைவரும் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கறுப்பு கொடிகளை காட்டுவார்கள். போராட்டக்காரர்கள் அரசின் உருவ பொம்மையை எரிப்பார்கள். மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வாகனங்களில் கறுப்பு கொடிகளுடன் எதிர்ப்பை தெரிவிப்பர். கறுப்பு கொடி வைப்பது குற்றமா? நாங்கள் ஒருவரின் கோபமாக உள்ளதை அது குறிக்கிறது. டெல்லியை நோக்கி பேரணி நடைபெறும் என்பது உண்மை இல்லை.

Farmers Protest

Credit : Dinamalar

போராட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இருக்கும் இடத்திலேயே கறுப்பு கொடியை காட்ட வேண்டும். மத்திய அரசிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறோம். போராட்ட களத்தில் தடுப்பூசி முகாம் அமைத்தால் தடுப்பூசிகளை (Vaccine) போட்டுக்கொள்வோம் என கூறினார்.

தமிழகத்தில் மத்திய மாவட்டங்கள் மற்றும் கோவையில் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் கறுப்பு கொடி போராட்டம் கடைபிடிக்கப்பட்டது.

மன்னார்குடியில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தனது வீட்டின் மீது கறுப்புக் கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்த லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பணியாளர்கள் மற்றும் தமிழ் மாநில விவாசய தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் புடலார், தஞ்சாவூர், திருச்சி மற்றும் மத்திய பிராந்தியத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள வீடுகளின் மீது கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.

திருச்சியில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவாசாயிகள் சங்கத்தின் தலைவரான அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் குழு, கருர்-பைபாஸ் சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

English Summary: Farmers' struggle goes on endlessly! Farmers across the country hoisted the black flag!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.