1. செய்திகள்

Covishield யாருக்கு ஏற்றது? யாரலாம் covaxin- ஐ செலுத்திக்கொள்ளாம் ..! டாக்டரின் கருத்து இதோ!!

Sarita Shekar
Sarita Shekar

For whom is Covishield suitable?

நாட்டில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவு ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒரு பெரிய ஆயுதம். ஒருபுறம், தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 

மறுபுறம், தடுப்பூசி  போட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், எந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது என்ற கேள்வியும் பலரது மனதிலும் உள்ளது. மூன்றாவது தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி இப்போதுதான் பொது மக்களுக்கு, அதுவும் சில இடங்களில் மட்டுமே கிடைக்கத்துவங்கியுள்ள நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கின்றன.

சமீபத்தில், மேதாந்தா மெடிசிட்டியின் தலைவர் டாக்டர் சுஷீல் கடாரியா, இது குறித்த தனது கருத்தை தெரிவித்தார் . மக்களிடம் தடுப்பூசி தொடர்பான எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என அவர் கூறுகிறார். இப்போது தடுப்பூசி போடுவதற்கான நேரமே தவிர, தடுப்பூசியின் பிராண்டை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் கட்டாரியா என்ன கூறினார்?

யார் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், யார் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவலையும் டாக்டர் கட்டாரியா வழங்கியுள்ளார். மேலும், '18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கு முன்னர் தங்கள் உடல நல கூறுகளை மனதில் கொள்ள வேண்டும். இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் வயதானவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று அவர் கூறினார்.

டாக்டர் கட்டாரியா கருத்துப்படி, 'கோவ்ஷீல்ட் முக்கியமாக வயதானவர்களுக்கு அல்லது கடுமையான நோயுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, சில அறிக்கைகளின்படி, ஒவ்வாமை உள்ளவர்கள், காய்ச்சல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் கோவாக்சின் எடுக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது . '

கோவாக்ஸ் இளைஞர்களுக்கு ஏற்றது

டாக்டர் கேடரியா கூறுகையில், 'ஆக்ஸ்போர்டு-ஏக்ஸ்ட்ராஜெனெகா ஜப் (Oxford-Astrazeneca jab) தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் இளம் வயதினரில், கோவாக்சினுடன் கோவாக்சினை  ஒப்பிடும்போது அதிகமான பக்க விளைவுகள் உள்ளன. கோவிஷீல்ட்  அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, இதனால் பல பக்க விளைவுகள் உள்ளன. . எனவே, இளைஞர்கள் கோவாக்சினை செலுத்திக்கொள்வது நல்லது' என்றார்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கோவாக்சினை தவிர்க்கலாம்

தடுப்பூசியின் நன்மைகள் குறித்து பேசிய டாக்டர் கட்டாரியா, 'கோவ்ஷீல்டின் டோஸ் கோவாக்சினை விட உடலில் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி  உள்ளவர்கள் கோவாக்சினைத் (Covaxin) தவிர்த்து கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க..

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!

English Summary: For whom is Covishield suitable? Who should pay for Covaxin? Here is the doctor's opinion!

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.