1. செய்திகள்

முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Lockdown

Credit : Daily Thandhi

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd Wave) தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை (Full Lockdown) தமிழக அரசு அறிவித்தது. இதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால், அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியுள்ளது. போலீசாரும் (Police) தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Corona Vaccine

Credit : Dinamalar

அத்தியாவசியப் பணிகள்

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் (Ambulance) மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படகின்றன.

மேலும் படிக்க

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

English Summary: Full Lockdown, deserted Tamil Nadu! Corona prevention action!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.