1. செய்திகள்

வேளாண் கருவிகள்! தமிழக விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்த புதிய திட்டம்

KJ Staff
KJ Staff
subsidy for tractors

தமிழக விவசாயிகள் இடையில் அதிகம் பார்க்கப்படும் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை. இதை சரி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி கிடைக்கவும், விவசாயிகளுக்கு லாபத்தை உயர்த்தவும் வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டத்தை வேளாண்மை பொறியியல் துரையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக இத்திட்டத்தில் ட்ராக்டர்களுக்கு ரூ 5 லட்சம், பவர் டிரில்லர்களுக்கு ரூ 85,000,  சுலர்கலப்பைகளுக் ரூ 45,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. பவர் டிரில்லர், சுலர்கலப்பை, கொத்து கலப்பை,  திருப்பும் வசதிக்கு கொண்ட ஹைடிராலிக்  வார்ப்பு இறகுக் கலப்பை, புதர் அகற்றும் கருவி, விசை களையெடுப்பான்,  தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றுக்கு 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம், இதில் எது உரியதோ, விவசாயிகளுக்கு அத்தொகையை மானியமாக வழங்குவர்.

இதே போல் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் இதில் எது உரியதோ, அத்தொகையை மானியமாக பெண் விவசாயிகள், சிறு- குறு, பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் இதர விவசாயிகளுக்கு வழங்கப்படும். வாடகை இயந்திர மையங்கள் அமைக்க விவசாய முனைவோர்கள், விவசாய சுய உதவிக்கு குழுக்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் மூலமாக அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை தகுந்த விலையில் வாடகைக்கு  வழங்கி விவசாயிகளை  பயனடையச்செய்யும் வகையில், அதிகபட்சமாக  (40 சதவீதம்) ரூ 10 லட்சம் மானியம் வழங்கப்படும்.

women farmers

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதி கணக்கில், பொது பிரிவினர்களுக்கு ரூ 5 லட்சம், தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்கு ரூ 3 லட்சம் பிடித்தம் செய்து, ஒப்பந்த காலமான நான்கு ஆண்டுகளுக்கு மொத்த மானியத் தொகையில் இருந்து இருப்பு வைக்கப்படும். மீதி மானியத் தொகையானது  நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சம்பத்தப்பட்ட அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சரிபார்க்கப்பட்டு பிறகு மானிய இருப்புத்தொகை மீண்டும் வழங்கப்படும்.

80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 8 லட்சம் தொகையை பண்ணை நடத்துவதற்கு போதிய வசதி இல்லாத கிராமங்களில் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாய குழுக்களுக்கு வாடகை மையங்கள் அமைக்க  மணியமானது வழங்கப்டுகிறது.

மேலும் இதில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள குழுக்களுக்கு முன்னுரை அளிக்கப்படும் என கோவை வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.சோமசுந்தரம் கூறியுள்ளார்.

விண்ணப்பிக்கும் முறை

விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற முதலில் தமிழக அரசின் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர் விவசாயிகளின் விண்ணப்பம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்படும்.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Good news for Farmers! Now Farmers will get 40 to 80 % of subsidy for Agriculture Tools and Machineries Published on: 30 August 2019, 03:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.