1. செய்திகள்

மனித - விலங்கு மோதல்களை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் - அரசு அறிவிப்பு

Daisy Rose Mary
Daisy Rose Mary
animal
Credit : Hindu Tamil

நகரமயமாக்கல் காரணமாக வனவிலங்களுகள் இரைதேடி நகருக்குள் வரும் சூழல் ஏற்படுகிறது. அப்போது மனித விலங்கு மோதல்கள் நிகழும்போது உயிரிழப்புகளும், விலங்குகள் நடமாட்டத்தால் பயிர்கள் சேதமாவதும் தொடர்கதையாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, மனித-விலங்கு மோதல்களை தடுக்கத் தேவையான அடிப்படை நடவடிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 2021 ஜனவரி 5 அன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 60-வது நிலைக்குழு கூட்டத்தில், நாடு முழுவதும் நடைபெறும் மனித-விலங்கு மோதல் மேலாண்மைக்கான அறிவுரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மனித-விலங்கு மோதல் நிலைமைகளை கையாள்வதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு முக்கிய பரிந்துரைகளை வழங்கும் இந்த அறிவிக்கை, துறைகளுக்கிடையேயான விரைவான, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளைக் கோருகிறது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 11 (1) (பி)-யின் படி பிரச்சினைக்குரிய வன விலங்குகளை கையாள்வதற்கான அதிகாரத்தை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்குமாறு இந்த அறிவுரை பரிந்துரைக்கிறது.

விரைவில் இடைக்கால நிவாரணம்

மனித-விலங்கு மோதலால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு பிரதமரின் ஃபசல் பீமா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் பலன்களை வழங்குதல், வனப்பகுதிகளில் தீவன, நீர் ஆதாரங்களை அதிகப்படுத்துதல் ஆகியவை மனித-விலங்கு மோதல்களைக் குறைப்பதற்காக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளில் சிலவாகும். உதவித் தொகையில் ஒரு பகுதியை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்.

24/7 கட்டுப்பாட்டு மையம்!

உள்ளூர்/மாநில அளவில் துறைகளுக்கிடையேயான குழுக்களை அமைத்தல், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளை நிறுவுதல், தடைகளை உருவாக்குதல், 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி எண்களுடன் கூடிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், அடிக்கடி மோதல் நடைபெறும் இடங்களைக் கண்டறிதல், தீவனம் வழங்கப்படும் விலங்குகளுக்கான மேம்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை துவம்சம் செய்யும் மண் கரைசல்!

திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்

கண்கவர் விவசாயக் கண்காட்சி- கள்ளக்குறிச்சியில் ஏற்பாடு!

English Summary: Govt. approves advisory for management of Human-Wildlife Conflict across the country. Published on: 07 January 2021, 05:39 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.