1. செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய agricopter': 10 மடங்கு வேகமானது, 100% பாதுகாப்பானது

KJ Staff
KJ Staff
Traditional Way of Pest Using

வளர்த்து வரும் விஞ்ஞானம் நமது பெரும்பாலான வேலைகளை எளிதாக்கியுள்ளது. இல்லங்களில் தொடங்கி அலுவலகம், அலைகள் என எல்லா இடத்திலும் வந்து விட்டது. இப்பொழுது வேளாண்மையிலும் 'அக்ரிகாப்டர்' எனப்படும் ஹெலிகாப்டர் மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் விவசாயிகளின் வேலையை எளிதாக்கும் வகையில் பூச்சி கொல்லி மருந்தடிக்க கூடிய அக்ரிகாப்டர் என்னும் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். பொதுவாக விவசாகிகள் பூச்சி கொல்லி மருந்தினை கைகளாலும் அல்லது சிறிய ரக இயந்திரங்களாலும் தெளிப்பதனால் உடல் நல குறைபாடு, சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த 'அக்ரிகாப்டர்'  மூலம் தெளிக்கும் போது இவ்வகையான பிரச்சனைகள் வராது. மேலும் இதற்கு வேலையாட்கள் யாரும் பெருமளவில் தேவையில்லை.

Students at the Centre For Innovation

நவீன அக்ரிகாப்டர் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.  இதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கேமரா பயிர்களின் வளர்ச்சியினை அறியவும், பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினை அறியவும் பயன் படுகிறது.  மேலும் இதன் மூலம் 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக்கொண்டு பயிர்களுக்குத் தெளிக்க முடியும்.

இதன் சிறப்பு என்னவெனில் மனிதனால் செய்வதை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இந்த அக்ரிகாப்டர் செயல் படும். பூச்சிக்கொல்லி மருந்துகள் வீண் ஆகுவதும்  குறையும். விண்வெளி துறையை சேர்த்த மாணவர்கள் இதனை உருவாக்கி சாதனை படித்துள்ளார். இதை உருவாக்குவதற்கான செலவு  5.1 லட்சம் ரூபாய் வரை ஆகும் எனவும், இதற்கு காப்புரிமை கோரி இருப்பதாகவும் ஐஐடி மாணவர்கள் கூறுகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: IIT Madras: Students Has developed 'Agricopter': Ten Times Faster And With 100% Precision Published on: 03 August 2019, 12:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.