1. செய்திகள்

அரசு மானியமாக வழங்கும் உரங்களை தனியாருக்கு விற்றால் சிறை தண்டனை - வேளாண் துறை எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Imprisonment for selling government subsidized fertilizers to private sector - Department of Agriculture
Credit : Owned

அரசு வழங்கும் மானிய உரங்களை (Fertilizers) தனியார் தொழிற்சாலைகளுக்கு  (Private Industries) விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் அருகே ஒரு தனியார் தொழிற்சாலையில் அரசு மானியத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக பிளைவுட் பசை தயாரிக்கப்பட்டது கடந்த சில நாட்களுக்கு வெளிச்சத்திற்கு வந்தது. வருவாய்த் துறையினர் நடத்திய ஆய்வில், அங்கிருந்த 42 டன் யூரியா உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டு தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் உர விற்பனைக் கடை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

அதில் பின்வரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • அரசு மானிய உரங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

  • அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

  • விவசாயிகளுக்கு ஆதார் எண் பெற்று முறையாக உரம் விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

English Summary: Imprisonment for selling government subsidized fertilizers to private sector - Department of Agriculture Published on: 24 November 2020, 08:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.