1. செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் ஊக்கத்தொகை!!

KJ Staff
KJ Staff

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி ஒன்றை, அம்மாவட்ட தோட்டக்கலைத் துறை (Horticulture Department) அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறையின் நல்ல திட்டம்

தற்போதுள்ள சூழலில், விவசாயம் செய்வதற்கு போதிய வசதிகள் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சிலர் விவசாயத்தை கைவிடும் நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் ஆறுதல் தரும் வகையில், ஊக்கத்தொகை (Incentive)அளிக்க முன்வந்துள்ளது திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை. இத்திட்டத்தால், விவசாயிகள் நிச்சயம் பயன் பெறுவார்கள், என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

காய்கறி சாகுபடி (Vegetable cultivation) செய்யும் விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக ரூபாய். 2500 அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்று திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை
துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த ஊக்கத்தொகை குறைவு தான் என்றாலும், இது விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை அளிக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. அனைத்து விவசாயிகளும், இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணப்பிக்கும் முறை:

தோட்டக்கலைத் துறையின் இத்திட்டத்தில் பயன்பெற, விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் விவசாயியின் ஆதார் அட்டை (Aadhar Card) முதலிய ஆவணங்களுடன், அந்தந்தப் பகுதிகளில் உள்ள உதவி தோட்டக்கலைத் துறை இயக்குநர் அலுவலகங்களை, அணுக வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு விவசாயிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால், விவசாயிகள் ஊக்கத்தொகைக்கு விரைவாக விண்ணப்பிக்குமாறு தோட்டக்கலைத் துறை கேட்டுக் கொண்டது. 

மேலும் படிக்க...

செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!

நீங்களும் அஞ்சலக முகவராக வேண்டுமா?- சிறிய முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்!

English Summary: Incentives on behalf of the Horticulture Department for the farmers of Tiruvallur district. Published on: 20 September 2020, 09:31 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.