1. செய்திகள்

India Post: அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு கட்டணம் இல்லை

Deiva Bindhiya
Deiva Bindhiya
India Post: Employment in the postal sector: No fees for women

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தாக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, அதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரம், கடைசித் தேதி குறித்த தகவல்களை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்(https://indiapostgdsonline.gov.in) குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்க்கலாம். அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், துணைபோஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 38ஆயிரத்து 926 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கல்வித் தகுதி விவரம்:

கிராம தாக் சேவக் பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதில் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். மாநில அரசு, மத்திய அரசு, யூனியன் பிரதேச அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து சான்று பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக உள்ளூர் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

ஊதிய விவரம்:

வயது: 18 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டருக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.12 ஆயிரம், துணை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தக் சேவாக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 2022, ஜூன் 5ம் தேதி கடைசித் தேதியாகும். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் (https://indiapostgdsonline.gov.in.) மூலமே வரவேற்கப்படுகின்றன. வேறு எந்த வழியில் அனுப்பினாலும் பரிசீலிக்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கட்டணம் இல்லை:

அனைத்து விண்ணப்பதார்ரகளும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம் பெண்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, அதில் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:

BOI Recruitment 2022: அரிய வேலைவாய்ப்பு, 89,890 வரை சம்பளம்

ஆராய்ச்சி மண் வள அட்டை: இதனால் பலன் என்ன?

English Summary: India Post: Employment in the postal sector: No fees for women Published on: 04 May 2022, 04:54 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.