Krishi Jagran Tamil
Menu Close Menu

நெல் சாகுபடியில் புதுமை: கடலூர் அருகே கேப்சூல் மூலம் நெல் நடவு பணி

Tuesday, 18 September 2018 08:45 PM

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே சேல்விழி கிராமத்தில் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகள் செய்து வருகின்றனர். போதிய மகசூல், லாபம் கிடைக்காததால்  இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நெல் நடவில் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின்  கேப்சூல்களில் இட்டு இவர்கள் சாகுபடி செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கேப்சூல் மூலம் பயிர் செய்வதை கண்டறிந்த இவர்கள் இந்த புதிய முறையை பின்பற்றி  நடவு  பணியை செய்ததாக கூறினர்.

ஒவ்வொரு கேப்சூல்களுக்குள்ளும் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்பட்டு  நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும். நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல்  முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும் என கூறுகிறார்கள். இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி  செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என இவர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக  இப்பகுதியில் கேப்சூல் நடவு முறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary: Innovation in paddy cultivation: Paddy planting work through kapsul near cuddalore

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
  2. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!
  3. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
  4. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
  5. கொட்டித்தீர்க்கும் கனமழை - நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!
  6. RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  7. இந்திய குடிமைப்பணி தேர்வு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
  8. PM-Kisan திட்டம் : உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லையா? - விபரங்கள் இதோ!!
  9. மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
  10. வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.