1. செய்திகள்

கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக்கவசமே மருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் உள்ளூர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு தொழில் அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் விதமாகவும் ஏற்படுத்தப்பட்ட “ஆத்ம நிர்பார் உத்தர பிரதேஷ் ரோஜ்கர் அபியான்'' (Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan) என்ற திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

டெல்லியில் இருந்தபடி திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், 6 மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தற்போது வரை கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால், அந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் 6 அடி தூரம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றார்.

கட்டுக்குள் கொரோனா - முதல்வர் பழனிசாமி

இதனிடையே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வல்லரசு நாடுகளே தவிக்கும் சூழலில், தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதேநேரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO), மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் (IMCR), மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கடைப்பிடித்ததன் விளைவாக வைரஸ் தொற்றை தடுக்கின்ற நிலையில் தமிழகம் இருப்பதாகவும், தமிழக அரசின் நடவடிக்கையால் இறப்பு சதவீதம் கட்டுக்குள் உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

Elavarase Sivakumar
Krishi Jagran

மேலும் படிக்க...

E-Mail சைபர் தாக்குதல் -இணையதள பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 12ம் தேதிவரை ரயில் சேவை ரத்து- ரயில்வே அறிவிப்பு

English Summary: Mask is the Medicine for Corona- PM Narendra Modi Published on: 26 June 2020, 05:27 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.