1. செய்திகள்

'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'

KJ Staff
KJ Staff

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடு இந்திய ஆகும். இங்கு பல்வேறு தேசிய கட்சிகளும், பல்வேறு மாநில கட்சிகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் தேர்தல்   களை கட்டி வருகிறது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியும் பல்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளது.  அரசியில் கட்சிகளை போலவே  மக்களும் தயாராகி வருகிறர்கள்.

விழிப்புணர்வு

கட்சிகளுக்கு இணையாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், வாக்களித்தலின் முக்கியத்துவத்தினை குறித்து  சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர்.      

" எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல"

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் வரவேற்கிறது சிவகங்கை மாவட்டம்,  தெக்கூர் கிராமத்தை சேர்ந்த வ.ஊ.சி  இளைஞர் நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் ஊர் எல்லையில் " எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்ற பெயர் பலகை வைத்திப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெயர் பலகை வைத்ததோடு நிற்காமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் கூறும் போது, எங்கள் ஊரில் சுமார் 500 வாக்காளர்கள் உள்ளனர். மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கின் முக்கியத்துவத்தையும், வாக்காளர்களின் கடமையும் எடுத்துரைத்து வருகிறோம். அணைத்து தரப்பினரும் எங்கள் கருத்தை ஏற்று கொண்டனர். எங்களின் அடிப்படை தேவைகளையும். பிரச்சனைகளையும், நிறைவேற்றுவார்கள் எனில் அவர்களுக்கு நாங்கள் வாக்கு அளிப்போம், என உறுதி கொண்டுள்ளோம்.  மேலும் அவர் கூறுகையில் மற்ற கிராமத்தினரும் எங்களை போல மாற வேண்டும். அப்போதுதான்  அடுத்த தலை முறைக்கு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்கள்.  அனைவரும் அவர்களை போன்று முடிவெடுக்க வேண்டும்.

English Summary: 'My vote is not for sale'

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.