Krishi Jagran Tamil
Menu Close Menu

அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

Wednesday, 25 November 2020 06:41 PM , by: Daisy Rose Mary

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்றும் , புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்கோது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வந்த நிவர் புயல் இப்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் வெளிசுற்று கடலூர் கரையை தொட்டு நகருக்குள் புக வேகம் எடுத்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.

புயலின் மையப்பகுதியான கண் பகுதி கரையை தொட இரவு 10 முதல் 11 மணியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

இதனிடையே புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புயலுக்கு பிந்தையை நடவடிக்கைகள்

தீவிர புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளி காற்று மணிக்கு 65 இல் இருந்து 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

26ஆம் தேதி பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

nivar cyclone நிவர் புயல் அதிதீவிர நிவர் புயல் வானிலை மையம்
English Summary: nivar cyclone landfall begins tonight. many area power cut due to heavy rainfall

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
  2. மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!
  3. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
  4. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!
  5. Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
  6. வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
  7. வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!!
  8. வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!
  9. டிராக்டர் பேரணியில் வன்முறை! போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ்!
  10. நாமக்கல் மாவட்டத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.