1. செய்திகள்

இனி முகக்கவசம் வேண்டாம்- கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
No more masks- Corona restrictions repealed

கொரோனா பரவலும், ஒமிக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டதைத் தொடர்ந்து,கொரோனாக் கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அரசு முடியு செய்துள்ளது. இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் சில நிறுவனங்கள் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளன.

இங்கிலாந்து நாடு, கொரோனாவால் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அங்கு ஒமிக்ரான் தொற்று பரவத்தொடங்கியபோது, அதைத் தடுக்கவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட மக்களுக்கு நேரம் கிடைக்கவும் கடந்த டிசம்பர் மாதத்தொடக்கத்தில் ‘பிளான்-பி’ என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

உடனடி அமல்

தற்போது அங்கு கொரோனா பரவலும், ஒமைக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அங்குள்ள போரிஸ் ஜான்சன் அரசு அறிவித்தது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, இனி இங்கிலாந்தில் மக்கள் கூடும் பொதுஇடங்கள் உட்பட எங்கும் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை. இது மக்களுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.

பாதுகாப்பு

இதற்கிடையே இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் கூறியதாவது:-அரசின் தடுப்பூசி திட்டம், கொரோனா சோதனை, வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் ஆகியவை இணைந்து ஐரோப்பாவில் சில வலுவான பாதுகாப்புகளை உருவாக்குகின்றன. இது எச்சரிக்கையுடன் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கிறது.

அதே நேரத்தில் நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் நீங்கவில்லை என்பதை தெளிவாக கவனிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்

முக கவசம் அணியத்தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறினாலும், சில கடைகள் மற்றும் பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள், மக்கள் முக கவசம் அணியுமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 84 சதவீதத்தினர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தகுதியானவர்களில் 81 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...

வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த அருமருந்தாகும் இயற்கை பானம்!

English Summary: No more masks- Corona restrictions repealed Published on: 28 January 2022, 11:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.