1. செய்திகள்

ஊரடங்கு தளர்வுகளால் தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Nursery schools open in Tamil Nadu today

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல், மார்ச் 2 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.

நர்சரி பள்ளிகள் திறப்பு (Nursery schools open)

இதன்படி, சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வு களில் அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மற்ற தளர்வுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. எனவே, நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை இன்று முதல் திறக்க, பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் (Relaxations)

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில், 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தலாம். உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் முழுமையாக செயல்படலாம். திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். உள் விளையாட்டு அரங்குகளில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 100 சதவீதம் பார்வையாளர்களுடன், விளையாட்டு போட்டிகள் நடத்தலாம்.

கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். 

அனைத்து பொழுது போக்கு கேளிக்கை பூங்காக்களும் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலுான்கள், அழகு நிலையங்கள் போன்றவை 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இன்று முதல் செயல்பட உள்ளன.

மேலும் படிக்க

பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல்!

தமிழகத்தில் LKG மற்றும் UKG வகுப்புகள் நாளை துவக்கம்!

English Summary: Nursery schools open in Tamil Nadu today due to curfew relaxation! Published on: 16 February 2022, 03:06 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.