1. செய்திகள்

மக்களே உஷார்!! 12 இடங்களில் பறவைக் காய்ச்சல்.. டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இந்தியாவின் பல பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் (bird flu) வேகமாக பரவிவருகிறது, இதையடுத்து டெல்லியில் பறவைக் காய்ச்சல் கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உயிர்க்கொல்லி நோயான பறவைக் காய்ச்சல் (Avian Influenza) சிக்கன் பிரியர்களை அச்சுறுத்தி வருகிறது இந்தியாவின் ராஜஸ்தானில், மத்தியப் பிரதேசம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 12 இடங்களில் இதற்கான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

12 பகுதிகளில் பாதிப்பு 

காகம், வெளிநாட்டுப் பறவைகள், வாத்து என பறவைகளிடம் இந்நோய் பரவிவருகிறது.

 • ராஜஸ்தானில் (காகம்) - பரான், கோட்டா, ஜலாவர்

 • மத்தியப் பிரதேசம் (காகம்) - மண்ட்சார், இந்தூர், மால்வா

 • இமாச்சலப் பிரதேசம் (வெளிநாட்டுப் பறவைகள்) - கங்கரா

 • கேரளா (வாத்து) - கோட்டயம், ஆழப்புழா என 4 இடங்களில் இந்நோய் பரவியுள்ளது.

இதையடுத்து பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சலுக்கான தேசிய செயல் திட்டப்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் பறவைகளை கொன்று புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, பறவைக் காய்ச்சல் நிலவரத்தைக் கண்காணிக்க மத்திய அரசு டெல்லியில் கட்டுப்பாடு அறையை ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி கிரிஷி பவனில் 190ஏ அறையில் (தொலைபேசி எண். 011-23382354) கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக பறவைகள் இறக்கின்றனவா என்பதை கண்காணிக்கும்படி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு இல்லாத மற்ற மாநிலங்கள், தீவிர கண்காணிப்பையும், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் – முக்கிய தகவல்கள்

 • பறவை காய்ச்சலுக்கு காரணமான ‘ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’ உலகளவில் பல நூற்றாண்டுகளாக பரவி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் 4 மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.

 • இந்தியாவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சல், கடந்த 2006ம் ஆண்டு ஏற்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், இந்தியாவில் மனிதர்களுக்கு இன்னும் பாதிப்பு ஏற்படவில்லை.

 • நோய் பாதிக்கப்பட்ட பறவை இறைச்சியைச் சாப்பிடுவதால், மனிதர்களுக்கு ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அனைத்து விதமான பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 • குளிர் காலங்களில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளால், பறவைக் காய்ச்சல் இந்தியாவில் பரவுகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளான பறவைகளை, மனிதர்கள் கையாள்வதால், இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

 • பறவைக் காய்ச்சல் அபாயத்தை முன்னிட்டு, மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கடந்த 2005ம் ஆண்டே செயல் திட்டத்தை உருவாக்கியது. அவை 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை கால்நடை பராமரிப்புத்துறை இணையதளத்திலும். 


  மேலும் படிக்க...

மாடு பிடி வீரர்களுக்கு வச்சாச்சு செக்- கொரோனா பரிசோதனை கட்டாயம் !

கோழிகளை நோயில் இருந்து காப்பாற்றும் எளிய மருத்துவ முறைகள்!

ஆடுகள் வளர்க்கப்போறீங்களா? சில முக்கிய ஆலோசனைகள்!

English Summary: People beware Bird flu in 12 places .. Monitoring center set up in Delhi !!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.