1. செய்திகள்

போக்குவரத்து காவல்துறை அறிவுப்பு: விதி மீறலில் ஈடுபடுவோருக்கு புதிய அபராதம்

KJ Staff
KJ Staff
New tariff

மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அபராதம் விரைவில் அமுல் படுத்த உள்ளதாக சென்னை பெரு நகர போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.   

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல் அதிக அளவில் நடக்கிறது. இதனால் உயிரிழப்பும், விபத்துகளும் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, உரிமம் இல்லாமல், உரிமம் புதிப்பிக்காமல் வாகனம் ஓட்டுவது என அனைத்தும் போக்குவரத்து விதிமீறல் கீழ் வரும் குற்றங்கள் ஆகும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல், விபத்துகள் பெருமளவில் நடைபெறுவதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர். விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை குறைவாக இருப்பதால், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கின்றனர் போக்குவரத்து காவல் துறையினர். இதன் காரணமாக தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் படி புதிய அபராதம் வசூலிக்கப்பட்ட உள்ளது.  சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து ஒரு நாளைக்கு 20,000 அதிகமான போக்குவரத்துக்கு அத்துமீறல் வழக்குகள் பதியப்படுகிறது எனவும், 100 அதிகமான போக்குவரத்து காவல் துறையினர் பணிகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புத்தாண்டு  போன்ற சிறப்பு நாட்களில் காவல் துறையினரின் பணி இரு மடங்காக உயருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Penality Details


போக்குவரத்து விதிமீறல்

தற்போதைய அபராதம்

புதிய அபராதம்

போக்குவரத்து பொது விதிமீறல் அபராதம்

ரூ 100

ரூ 500

சாலை ஒழுங்குமுறை விதிமீறல்

ரூ 100

ரூ 500

பயணச் சிட்டு இல்லமால் பயணிப்பது

ரூ 200

ரூ 500

போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுதல்

ரூ 500

ரூ 2000

அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ரூ 1000

ரூ 5000

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ரூ 500

ரூ 5000

தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனம் ஓட்டுதல்

ரூ 500

ரூ 10,000

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெரிய வாகனம்

-           

ரூ 5000

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்

ரூ 400

ரூ 1000 -2000

ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதல்

ரூ 1000

ரூ 5000

மது அருந்தி விட்டு  வாகனம் ஓட்டுதல்

ரூ 2000

ரூ 10000

சாலைகளில் வேகமாக/ பந்தயங்களில் ஈடுபடுவது

ரூ 500

ரூ 5000

அனுமதியின்றி வாகனம்  ஓட்டுதல்

ரூ 5000

ரூ 10000

உரிமம் தொடர்பான அதிமிறல்

 -

ரூ 25,000 –

 100000

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது

ரூ 100

ரூ 1000

இரண்டிற்கு மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது

ரூ 100

ரூ 2000*

தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது

ரூ 100

ரூ 1000*

ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தேவைக்கு வழிவிடாமல் வாகனம் ஓட்டுவது

-

ரூ 10000

காப்பீடு இல்லமல் வாகனம் ஓட்டுவது

ரூ 1000

ரூ 2000

சிறார்கள் வாகனம் ஓட்டுவது

 -

**

* ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதி இழப்பு
**காப்பாளர்/வாகன உரிமையாளர் குற்றவாளி, ரூ 25,000 அபராதம் மற்றும் 3   ஆண்டுகள் சிறை. வாகனத்தின் பதிவு ரத்து.

Anitha Jegadeesan 
krishi Jagran  

English Summary: Read the Revised list of Penalties for Traffic Violation Published on: 16 August 2019, 01:10 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.