1. செய்திகள்

உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படும் ஆபத்து- SBI எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Risk of your bank account being frozen-SBI Warning!

மார்ச் 31 ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பான் மற்றும் -ஆதார் அட்டைகளை இணைக்கவில்லை எனில், உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று, SBI எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI)  வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி மார்ச் 31, 2022க்கு முன் பான்-ஆதார் கார்டை இணைக்குமாறு வங்கி தனது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவையை நிறுத்துவது, வங்கிக்கணக்கை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து SBI ட்வீட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

மார்ச் 31 வரை வாய்ப்பு

SBI கூறியதாவது, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு (Aadhaar PAN Link) அறிவுறுத்துகிறோம், இதனால் எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்கவும் மற்றும் தடையற்ற வங்கி (State Bank Of India) சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும். இதனுடன், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்று வங்கி தெரிவித்துள்ளது. பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், பான் செயலிழந்துவிடும் மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணைப் பயன்படுத்த முடியாது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 30 செப்டம்பர் 2021 முதல் மார்ச் 31, 2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இணைப்பது எப்படி?

வழிமுறை 1

  • வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

  • https://www.incometaxindiaefiling.gov.in/home

  • இங்கே இடது பக்கத்தில் உள்ள Link Aadhaar என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

  • ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் PAN, AADHAAR மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயரை நிரப்ப வேண்டும்.

  • உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், 'I have only year of birth in aadhaar card' என்ற விருப்பத்தை டிக் செய்யவும்.

  • கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும் அல்லது OTPக்கு டிக் செய்யவும்

  • ஆதார் பொத்தானைக் கிளிக் செய்தவுடன், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பைப் பெற்றுள்ளீர்கள்.

வழிமுறை 2

  • SMS மூலமாகவும் PAN மற்றும் Aadhaar இணைக்கலாம்

  • மொபைலின் செய்தி பெட்டியில், -UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN> என டைப் செய்யவும்.

  • இந்த செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பைப் பெற்றுள்ளீர்கள்.

மேலும் படிக்க...

எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!

தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!

English Summary: Risk of your bank account being frozen-SBI Warning! Published on: 07 February 2022, 09:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.