1. செய்திகள்

ரூ.100 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஸ்டாலின் உத்தரவு, கொரோனாவின் 3-வது அலை முன்னேற்பாடு:

T. Vigneshwaran
T. Vigneshwaran

பொது நிவாரண நிதியிலிருந்து, மூன்றாம் அலை தொடர்பான கொரோனா தொற்று சிகிச்சைக்காக,  முன்னேற்பாடு நடவடிக்கைக்கும், மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை வாங்குவதற்கும்,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கை கொடுக்கும் வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார், இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க, மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு,ஆர்டி-பிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகள் மூலம் ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கும் 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் போன்ற அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கும் 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஆணையிட்டிருந்தார்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா தொற்றின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்கு, இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் படிக்க:

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா- விஜயகாந்த் கூற்று

English Summary: Rs 100 crore allocation: Chief Minister Stalin's order, Corona's 3rd wave reservation:

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.