Krishi Jagran Tamil
Menu Close Menu

பருவமழை2020 : தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

Tuesday, 16 June 2020 02:09 PM , by: Daisy Rose Mary

Credit by : IE Tamil

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கியது, அதை தொடர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில், லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

 • இன்றும் நாளையும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்

 • ஜூன் 17ம் தேதி வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

 • இன்று 16 முதல் ஜூன் 20 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

 • அதே போல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

 • இன்று மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்

 • இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 • மேலும் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3.0 முதல் 3.5 மீட்டர் வரை ஒரு சில நேரங்களில் எழும்ப கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது

மழை பொழிவு

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலா, கூடலுர் பஜார், சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார், சின்கோனா, புளிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

மேலும் படிக்க...

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!

Chennai rain TN Rain South West monsoon Southwest Monsoon Monsoon Rains சென்னை வானிலை மழை தென்மேற்கு பருவமழை வடகிழக்குப் பருவ மழை வேளாண் செய்திகள்
English Summary: Southwest Monsoon to Bring Heavy Rainfall over These Places in tamilnadu and puducherry

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. கேரளாவில் பரவுகிறது தென்னை வேர் வாடல் நோய்! எல்லையோரத் தமிழக மாவட்டங்களிலும் பாதிப்பு!
 2. மாதந்தோறும் லாபம் வழங்கும் கோழிப்பண்ணை! இப்போதே அமைக்க கடன் வழங்கும் வங்கிகள்! வாங்க தொழில் தொடங்கலாம்..!!
 3. உரச்செலவை குறைத்து அதிக சாகுபடி பெற வேண்டுமா? - வேளாண்துறை சொல்வதைக் கேளுங்கள்!!
 4. இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!!
 5. நெற்பயிருக்கு காப்பீடு செய்ய மீண்டும் வாய்ப்பு- காலஅவகாசம் டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!
 6. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!
 7. MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
 8. IOC நிறுவனத்தில் வேலை- 493 பணியிடங்களுக்கு அறிவிப்பு!
 9. வங்கக்கடலில் உருவானது புரெவி புயல்- தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!
 10. விவசாயிகளே! இது உங்களுக்கு தான்! புயல் காலத்தில், பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனைகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.