1. செய்திகள்

இலங்கையில் நேற்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவுப்பு : இன்டர்போல் உதவிக்கரம்

KJ Staff
KJ Staff

இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 310 ஆகவும், காயமடைதோர் எண்ணிக்கை 500 அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பெறுப்பேற்காத நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு செய்திருக்க கூடும் என இலங்கை அரசு சந்தேகப்படுகிறது. சில தடயங்களும் கிடைத்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 40 பேரை கைது செய்துள்ளது.

இலங்கை அமைச்சரவை இன்று அவசரமாக கூடி பயங்கர வாத தடுப்பு சட்டம் கொண்டு வர உள்ளது. மேலும் அவசர நிலை பிரகடனம் அமுலில் உள்ளது. இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது. முப்படையினருக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்க பட்டுள்ளது. ஏற்கனவே புலனாய்வுத்துறைக்கு  இது தொடர்பாக  எச்சரிக்கை வந்ததாக   இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ, தனது  ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார். இலங்கையில் பிரதமர் ரணில் மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேன இடையே சிறந்த உறவு இல்லாததால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மறைத்திருக்க கூடும் என ஒரு கருத்தும் நிகழ்கிறது

முதல் கட்ட விசாரணையில் 7 பேர்  மனித வெடி குண்டாக செயல் பட்டிருக்கின்றனர் என கண்டறிய பட்டுள்ளது. மேலும் நேற்று சக்தி வாய்ந்த 87 டெடனேடர்களை செயலிழக்க செய்துள்ளனர். இன்டர்போல், "'இன்சிடன்ட் ரெஸ்பான்ஸ் டீம்' " எனும் தந்து குழுவினை இலங்கை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் தலை சிறந்த தடயவியல் நிபுணர்கள், புலனாய்வு  நிபுணர்கள்,தீவிரவாத தடுப்பு போன்றோர் இடம் பெறுவர்.

பெரும்பாலான மக்கள் வீட்டினுள்ளே அடைந்து இருக்கிறார்கள். தெருக்கள் வெருசோடி உள்ளன. இந்த தீவிரவாத செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English Summary: Sri Lanka declared emergency, Interpol offers Support

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.