1. செய்திகள்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு. உலக நாடுகள் கண்டனம் . தாக்குதல் குறித்து முன்னரே அறிவுப்பு வந்ததா? ஹரின் பெர்ணான்டோ கேள்வி

KJ Staff
KJ Staff

இலங்கையில் நேற்று பல்வேறு இடங்களில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலகெங்கும் ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில்   இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு அரங்கேறி உள்ளது. குறிப்பாக இத்தாக்குதலானது தேவாலயங்களின் மீது நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தெரியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள பல்வேறு  நட்சத்திர விடுதிகளில்  குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு எனும் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 290 எட்டியது. மேலும் 400 அதிகமானோர் காயமடைதிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனவெளிநாட்டினை சேர்த்த பலரும் இதில் இறந்திருக்கின்றனர். இதுவரை 6 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து முன்னரே அறிவிப்பு கிடைத்த போதிலும், போதிய பாதுகாப்பு வழங்கத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார். தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் கொடுத்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது வருந்தத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,அவரது டிவீட்டர் பக்கத்தில் அவர்களது அறிவிப்பு கடிதத்தை வெளியீட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24  பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்தபின்பு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இதனை  கூறலாம்.

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  ஈஃபில் டவரின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.

English Summary: Sri Lanka's Bomb Blast:Hit Many Churches and Five Star Hotels

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.