1. செய்திகள்

STIHL Engines: விவசாய பணிக்கு ஏற்ற வகையில் 2 புதிய எஞ்ஜின்கள் அறிமுகம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
STIHL launches 2 new engines

பல தசாப்தங்களாக இயந்திரங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும், STIHL நிறுவனம் இரண்டு புதிய பல்நோக்கு தன்மைக் கொண்ட 4 ஸ்ட்ரோக் நிலையான எஞ்சின்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஞ்சின்களின் தன்மை என்ன? அவை எந்த வகையில் வேளாண் துறைக்கு உதவியாக இருக்கும் போன்ற தகவல்களை அலசுகிறது இந்த கட்டுரை.

ஜெர்மனியைச் சேர்ந்த STIHL நிறுவனம், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையினால் உலகளாவிய உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில், STIHL நிறுவனம் அதன் இரண்டு புதிய பல்நோக்கு 4 ஸ்ட்ரோக் இன்ஜின்களான 12.5 Nm torque (EHC 605 S) and 15.6 Nm torque (EHC 705 S) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எஞ்சின் கட்டமைப்பு, பயன்பாடு குறித்த விவரங்கள் பின்வருமாறு-

மாடல் எண்: EHC 605 S

விவசாயம், கட்டுமானம், தொழில்துறை சார்ந்து இந்த எஞ்சினை பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் CC - 212 என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆற்றல் வெளியீடானது (kW/HP), 4.4 Kw/6.0 HP, இயங்கும் வேகம் (Working Speed (RPM)- 4000 (+/-150) RPM, மொத்த எடையானது 15.7  கிலோ ஆகும். எரிபொருள் கொள்ளளவு 3.6 லிட்டர் வரை. மேலும் STIHL  நிறுவனம் EHC 605 S மாடலுக்கு 2 வருட உத்தரவாதம் வழங்குகிறது.

மாடல் எண்: EHC 705 S

மற்றொரு அறிமுகமான EHC 705 S செயல்திறன் அனைத்து வகையிலும், EHC 605 S- விட சிறந்ததாக உள்ளது. இவற்றின் CC - 252 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றல் வெளியீடானது (kW/HP), 5.2 Kw/7.0 HP, இயங்கும் வேகம் (Working Speed (RPM)- 4000 (+/-150) RPM, மொத்த எடையானது 17.3  கிலோ ஆகும்.

எரிபொருள் கொள்ளளவு 4.0 லிட்டர் வரை. மேலும் STIHL  நிறுவனம் EHC 705 S மாடலுக்கு 2 வருட உத்தரவாதம் வழங்குகிறது.

இரண்டு எஞ்சின்களின் பயன்பாடு:

6 ஹெச்பி மற்றும் 7 ஹெச்பி பவர் கொண்ட 4 ஸ்ட்ரோக் ஸ்டேஷனரி எஞ்சின் மாடல்களான EHC 605 S மற்றும் EHC 705 S ஆகியவை விவசாயம், கட்டுமானம், இரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் கடல்சார் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு ஏற்ப வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பம்புகள் மற்றும் HTP தெளிப்பான்களுக்கு இந்த புதிய பல்நோக்கு இன்ஜின்களை நீங்கள் தாரளமாக பயன்படுத்தலாம். பராமரிப்பு செலவு குறைவு, எரிபொருள் சிக்கனம், குறைந்த வாயு உமிழ்வு என சுற்றுச்சூழலின் தன்மைக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு எப்படி அணுகுவது?

பல்நோக்கு தன்மைக்கொண்ட 4 ஸ்ட்ரோக் எஞ்சின் மாடல்களான STIHL EHC 605 S மற்றும் STIHL EHC 705 S ஆகியவற்றின் விலை குறித்து நீங்கள் அறிய விரும்பினால் STIHL நிறுவனத்தின் 90284 11222 என்ற இந்த எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் பெறலாம். இது தவிர, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.stihl.in என்பதனை பார்வையிடுவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்.

Read more:

AGRISTACK மற்றும் GRAINS திட்ட பணிகளை கண்காணிக்க ஆட்சேர்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

20 ஆண்டுகளாக KVK மூலம் தொடர் பயிற்சி- முன்னோடி விவசாயியாக திகழும் ஒண்டிமுத்து!

English Summary: STIHL launches 2 new multi purpose stationary engines including agriculture sector Published on: 27 March 2024, 03:57 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.