1. செய்திகள்

பணத்தை இருமடங்காக பெருக்க சூப்பர் திட்டம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
சூப்பர் திட்டம்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வெகு விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த கிசான் விகாஸ் பாத்ரா திட்டமாகும். இந்திய அஞ்சல் துறை சார்பில் கடந்த 1988ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில், கிசான் விகாஸ் திட்டமானது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டமாக உள்ளது. அதாவது, மொத்தமாக 124 மாதங்களைக் கொண்ட இந்த திட்டத்தில் 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டு காலத்தில் உங்கள் பணம் அப்படியே இரட்டிப்பாக கிடைக்கிறது.

யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் சேரலாம்?

இந்தியாவை சேர்ந்த யார் வேண்டுமானாலும், அவர்களது பெயரில் இந்தத் திட்டத்தில் இணையலாம். அதேபோல, குழந்தைகள் சார்பில் பெரியவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் 3 பெரியவர்கள் கூட்டாக இணைந்தும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைத்து அஞ்சல் நிலைய அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்திய அஞ்சல் நிலைய இணையதளம் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாக திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பயனாளர்கள் ரூ.1,000 என்ற அளவில் முதலீடு செய்யலாம். இதற்கடுத்து ரூ.100 என்ற பெருக்கல் வகையில் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதற்கு வரம்பு எதுவும் கிடையாது. முன்னதாக, கடந்த 1988ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டமானது, பின்னர் மேம்பட்ட மாற்றங்களுடன் 2014ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு பான் அட்டை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு வருமான ஆதாரம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

திருச்சியை அச்சுறுத்தும் புதிய வகை 'டைப்பஸ்' காய்ச்சல்

English Summary: Super plan to double your money Published on: 28 September 2022, 07:29 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.