Krishi Jagran Tamil
Menu Close Menu

தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விரிவான தகவல்கள்

Wednesday, 28 August 2019 03:44 PM
TNPSC Group 4

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு  (TNPSC Group 4 Exam Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 1-ம்தேதி நடைபெற உள்ள இந்த தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை நடைபெறுகிறது. காலியாக உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு ஒரே கட்டமாக 301 தேர்வு மையங்களில் நடை பெற உள்ளன.

வினாத்தாள் அமைப்பு

 • மொத்தம் 200 கேள்விகள்
 • பொதுப்பிரிவு - 75 கேள்விகள்
 • ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன் பிரிவு - 25 கேள்விகள்
 • பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் - 100 கேள்விகள்

நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

 • அதிகாரபூர்வ இணையத்தளங்களான http://www.tnpsc.gov.in/, https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== செல்லவும்.
 • விண்ணப்ப எண் மற்றும், பிறந்த தேதி போன்ற தகவல்களை உள்ளீடு செய்து தங்களுக்கான  நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

நுழைவுச் சீட்டு கிடைக்க பெறாதவர்கள் என்ன செய்வது?

நுழைவுச் சீட்டு கிடைக்க பெறாதவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், தேர்வு கட்டணம், கட்டணம் செலுத்திய ரசீது நகல், செலுத்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகம் பற்றிய விவரங்கள், பரிவர்த்தனை எண், தேதி என அனைத்து விவரங்களையும் contacttnpsc@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Rules to be follow

தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

 •  30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு அறையில் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை.
 • தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள் வழங்கப்படும்.
 • தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர மற்ற பொருட்களான புத்தகம், செல்போன், ப்ளூடூத், வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், கால்குலேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
 • லாக் டேபிள், ஸ்டென்சில்ஸ், மேப்புகள், ரஃப் தாள்கள் எடுத்து வர அனுமதி இல்லை.
 • தேர்வு நேரம் முடிந்த பின்னரே  தேர்வர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று தேர்வு நேரம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்க பட மாட்டாது.
Banned items in the exam hall
 • விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதியுண்டு.
 • தேர்வர்கள் மற்றவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்க அனுமதி இல்லை.
 • நுழைவுச் சீட்டு  (Hall Ticket)  நீலம் அல்து கருப்பு மை பேனா மட்டுமே எடுத்துக் கொண்டு தேர்வு அறைக்குள்  வர வேண்டும். மற்ற எந்த பொருளை கொண்டுவரவும் அனுமதியில்லை.
 • வினாத்தாள் கிடைத்தவுடன் முதலாவதாக,  முழுவதும் அச்சடிக்கப்பட்டுள்ளதா, பழுதின்றி இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் தரப்பட்ட 10 நிமிடங்களுக்குள் தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்து  மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பின் வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் மாற்றித் தரப்பட மாட்டாது.
 • வினாத்தாள் (Question Paper) ஏதேனும் தவறுள்ளதாக கருதினால் தேர்வு முடிந்த 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், முகவரி, கேள்வி எண், வினாத்தாள் வரிசை எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வினாத்தாள் நகலுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு முறையீடு செய்ய வேண்டும். 

Anitha Jegadeesan
Krishi Jagran

TNPSC Group 4 TNPSC Group 4 Exam Exam Date and Hall ticket Admit card Tamil Nadu Combined Civil Services exam Tamil Nadu Public Service Commission (TNPSC) Total 200 questions 301 Exam Centres TNPSC notification Total of 6491 vacancies
English Summary: Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4: Released Admit Card and Exam Rules

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. நீலகிரிக்கு தொடரும் ரெட் ஆலர்ட்; அதி கன மழைக்கும் வாய்ப்பு!!
 2. வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
 3. மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
 4. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
 5. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!
 6. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
 7. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
 8. நீலகிரி, கோவை, தேனிக்கு ரெட் அலேர்ட்! 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
 9. RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 10. இந்திய குடிமைப்பணி தேர்வு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.