1. செய்திகள்

தமிழை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Governor RN Ravi about tamil

மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். தமிழை பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி செய்வேன் என்றும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளர்.

சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். பின்னர் பேசிய அவர்; இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்; இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

பழமையான மொழி

பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்.

தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்

தமிழ் மொழியை நாடு முழுவதும் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் இருக்கை அமைக்க அரசு முன்வர வேண்டும். தமிழ் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது, பழமை வாய்ந்தது.

தமிழகம் முன்னோடி மாநிலம்

கல்வி, தொழில் மருத்துவ துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன்.

4500 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரம்

சட்டசபையில் முதல்வர் அறிவித்தபடி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். இந்தியா கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழில்துறையிலும் பாரம்பரியம் கொண்டது. காலனி ஆதிக்கம் உருவான 1750களில் இந்தியா மற்றும் சீனாவின் தொழில் துறை உற்பத்தி உலகில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 73%ஆக இருந்தது. 1,800 களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது எனவும் கூறினார்.

தமிழை புகழ்ந்த ஆளுநர்

பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரிய மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி கூறினார். முதல்வர் மு.க ஸ்டாலின் பேசும் போது உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து திகழ்வதாகக் கூறினார். அதே மேடையில் தமிழின் பெருமையைப்பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!

English Summary: Tamil should be spread all over the country - Governor RN Ravi praise Published on: 16 May 2022, 07:08 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.