1. செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது: . வேட்பாளர் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

KJ Staff
KJ Staff

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது.  அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கும்,  புதுச்சேரியில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தேர்தல்  நடைபெறவுள்ளது.

கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குகள் சேர்த்து வந்தனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் தமிழகத்தில் வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தேர்தல் அமைதியாக நடக்க சில வழி முறைகளை வழங்கினார்.

  • தொகுதிக்கு தொடர்பு இல்லாத ஆட்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், கட்சி விளம்பரங்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிளோ வெளியிட கூடாது, இதனை மீறி செயல் படுவோர்க்கு 2 ஆண்டுகள் வரை  சிறை  அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக  கொடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   

  • வாக்காளர்களை அழைத்து வருவதற்கோ அல்லது அழைத்து செல்வதற்கோ கட்சி வாகனங்களையோ , அல்லது மற்ற வாகனங்களையோ பயன் படுத்த கூடாது. கட்சின் தற்காலிக அலுவலகம் வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டர்  தொலைவில் இருக்க வேண்டும்.

  • திருமண மண்டபம், தாங்கும் விடுதி, சமூக கூடம் போன்ற இடங்களில் யாரும் தங்க கூடாது. நட்சத்திர பேச்சாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் அவர்களது தொகுதிக்கு திரும்ப வேண்டும்.

  • வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தோ்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் செல்போன் உபயோக படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • 18 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறும். மதுரையில் மட்டும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இருப்பதால் அங்கு மட்டும் காலை  7 மணிக்கு தொடங்கி மாலை 8 மணி வரை நடைபெறும்.

  • ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்துவதற்கு அனுமதி இல்லை.

 இவ்வாறு அவர் தேர்தல் விதிமுறைகளை விவரித்தார்.  

English Summary: The election campaign ends with the evening in Tamilnadu and Puduvai today. Candidate final ballot collection Published on: 16 April 2019, 02:39 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.