1. செய்திகள்

ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு

KJ Staff
KJ Staff

ஈரோட்டில் விளையும்  மஞ்சளுக்கு  இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவ்வட்டார மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

புவிசார் குறியீடு

 இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் புவியில் தன்மைகேற்ப  தனித்துவமான சிறப்புகள், அடையாளங்களை அங்கிகரித்து வருகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக தனித்தன்மை மாறாமல் தயாரிக்கப்படுமேயானால் இந்திய அரசானது "புவிசார் குறியீடு" என்னும் அங்கிகாரம் கொடுத்து கவுரவிக்கும். 

மஞ்சளுக்கான புவிசார் குறியீடு

இன்று  உலகளவில் மஞ்சளுக்கான சந்தை தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளன. இந்தியாவில், பல்வேறு இடங்களில் மஞ்சள் விளைவிக்க படுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவில் உள்ள வைகான் மஞ்சள், ஒடிசாவில் உள்ள கந்தமால் மலை மஞ்சள்  புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மஞ்சளும் இப்போது  இடம்  பெற்றுள்ளன.

ஈரோடு மஞ்சளின் சிறப்பு

ஈரோடு மாவட்டத்தில் சின்ன நாடன் வகை மஞ்சள்தான் பெருமளவில்  விளைவிக்கபடுகின்றன. பொதுவாக, இங்கு ஜூன்-ஜூலை மாதங்களில் பயிர் செய்து, ஜனவரி - மார்ச் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். இங்கு விளைவிக்கும் மஞ்சளில் குர்குமின் என்னும் வேதி பொருள் 2.5% -4.5% உள்ளது. இப்பயிரானது 20° to 37.9 ° வெப்பநிலையிலும், 600 to 800 சென்டிமீட்டர் மழை பொழிவிழும் வளர்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான் விவசாயிகள் மஞ்சள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தளவாடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்கள், கோயமுத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் இவ்வை மஞ்சள் விளைவிக்க படுகின்றன. உலகளவில் நல்ல விலையும் கிடைக்கும். இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் மஞ்சள் ஏற்றுமதி, உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் தனியிடம் பெறும்.

English Summary: The geographical index of the Indian state for the emerging yellow tree in the Erode Published on: 01 April 2019, 10:12 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.