1. செய்திகள்

மூன்றாம் அலையை தடுக்க: தடுப்பூசி திருவிழா !!!

Sarita Shekar
Sarita Shekar
தடுப்பூசி

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தாக்கத்தை தவிர்க்க , தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது ஒரு முன் எச்சிரிக்கையாகும். 

கடந்தாண்டு மார்ச் மாதம் புதுச்சேரியில், கொரோனா தொற்று நோய் பரவத் துவங்கியது. இதில், நேற்று முன்தினம் வரை  1,19,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,775 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள அச்சத்தை அகற்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன்பொய்த்திலும், மொத்தம் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில், கடந்த 5 மாதங்களில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 368 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 656 பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசும் ஓரிரு மாதங்களில் மூன்றாம் அலை வர வாய்ப்பு உள்ளதாகவும், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மீண்டும் தடுப்பூசி திருவிழா

மாநிலத்தில் மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கும் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு முன்பாக தடுப்பூசி போடா பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக துவங்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்திட நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடத்தியது போன்று வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

செயலாக்க குழு

கொரோனா மூன்றாம் அலையை எதிர்ப்பதற்கு, சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் குழந்தை நல மருத்துவர்களை கொண்டு மாநில அளவிலான செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை தாசில்தார்

மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்களை கொண்டு மாவட்ட அளவிலான செயலாக்க குழு அமைந்துள்ளது.

இக்குழுவினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அதில், கொரோனா மூன்றாம் அலை பரவலை எதிர்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசித்து திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

பணியாளர்களுக்கு பயிற்சி

மத்திய அரசு வழிகாட்டலின் படி ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு, குழந்தைகளுக்குள் ஏற்படும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்றின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளவும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுவாச கருவி வசதியுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தயாராகி வருகிறது.

மேலும் படிக்க

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

English Summary: To prevent the third wave: Vaccine Festival !!! Published on: 17 July 2021, 11:53 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.