பருத்தி சாகுபடியில் (Cotton) நல்ல லாபம் கிடைக்ககாததைக் கருத்தில் கொண்ட விவசாயிகள் பலர், அதற்கு பதிலாக, நெல் சாகுபடியைத் துவங்கியுள்ளதால், சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துஉள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், பருத்தி (Cotton)சாகுபடி செய்வதில், கவனம் செலுத்தி வந்தனர். இவர்களுக்கு தேவையான மானிய உதவிகள், வேளாண் துறையால் வழங்கப்படுகின்றன. எனினும் கடந்த சில மாதங்களாக பருத்தி சாகுபடியில், விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கவில்லை.
இதனால், மாற்றி யோசித்த விவசாயிகள், தற்போது நெல் (Paddy) சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர். நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையால், அதிகளவில் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
நெல் கொள்முதலுக்கான ஆதார விலையும், மத்திய, மாநில அரசுகளால் குறித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே, விவசாயிகளின் ஆர்வம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
நெல் சாகுபடி பரப்பு (Paddy Cultivation)
நடப்பு பருவத்தில் மாநிலம் முழுதும், 21 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும், 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி. இதன்மூலம் கடந்தாண்டை விட நடப்பு பருவத்தில், 1.77 லட்சம் ஏக்கரில், கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...