1. செய்திகள்

உத்தரபிரதேச தேர்தல் 2022: யோகி ஆதித்யநாத் 80 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார்

KJ Staff
KJ Staff
Yogi Adityanath Voting Poll

ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வாக்களித்ததைத் தொடர்ந்துவளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் வைத்து வாக்களிக்குமாறு வாக்காளர்களை முதலமைச்சர் வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின் ஆறாவது சுற்றில் வியாழக்கிழமை (03-03-2022), கோரக்பூரில் பாரதிய ஜனதா கட்சி 80% இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கணித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் தெரிவித்தார். கோரக்பூர் நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில் ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அவர் வாக்களித்ததைத் தொடர்ந்து, வாக்காளர்களை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் வைத்து வாக்களிக்குமாறு, அவர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையில், “பெரும்பாலான மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். மாநிலத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். “வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என அறிவித்தார்.

முன்னதாகஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஆதித்யநாத் அறிவித்தார். ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்படும், ஒவ்வொரு வாக்கும் உத்தரபிரதேசத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற உதவும் என தெரிவித்தார்மேலும் அவர்வாக்களிக்கும் மக்களை பார்த்துஇதுவே தேர்ந்தேடுப்பதற்கு சரியான நேரம்பாஜக-வா அல்லது தீவிரவாதத்தை உக்குவிப்பவர்களா என கேள்வியும் எழுப்பினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்குவதற்கு முன்னதாககோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார்.

கோரக்பூர், அம்பேத்கர்நகர், பல்லியா, பல்ராம்பூர், பஸ்தி, தேவ்ரியா, குஷிநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 57 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 676 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க 1,14,63,113 ஆண்கள், 99,98,383 பெண்கள் மற்றும் 1,320 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,14,62,816 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிடும் ஆறாவது சுற்றில், முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய வேட்பாளர் ஆவார்.

மேலும் படிக்க..

1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு!

English Summary: Uttar Pradesh Election 2022: Yogi Adityanath confident of winning over 80% of seats Published on: 03 March 2022, 06:11 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.