1. செய்திகள்

தடுப்பூசியின் 3வது டோஸ், இன்று முதல் பதிவு தொடக்கம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Vaccine 3rd dose

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வருகிற 10-ந் தேதிமுதல் 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது.

கடந்த மாதம், இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். வெளிநாடுகளில் 3-வது தவணை தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் மத்திய அரசு இதை முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்று வகைப்படுத்தி உள்ளது. மாநில அரசுகள், பூஸ்டர் தடுப்பூசி-க்கு, ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க
வலியுறுத்திக்கொண்டே இருந்ததும் குறிப்பிடதக்கது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

முன்பாக, 2 தவணைகளில் எந்தவகை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ, அதே வகை தடுப்பூசியை தான் 3-வது முறை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துவிடுத்துள்ளது. அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நேரத்தையும், இடத்தையும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளதாவது:-

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு எந்த நேரம் உகந்ததாக இருக்குமோ அதை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்காக இணையத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று (08-01-2022) மாலை முதல் நேரத்தையும், இடத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி, விவரங்களை அதில் பெற்றிடலாம். அதிலேயே குறிப்புகளும் இருக்கும்.

வருகிற 10-ந்தேதி தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு செயல்படுகிறதோ அவற்றில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுக்கு வசதியான முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பட்டியலில் சுமார் 6 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த 6 கோடி பேருக்கும் வருகிற மார்ச் மாதத்துக்குள் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

காபி விலை உயர்வு: அதிக அளவில் பயிரிட்டும் இந்தியாவுக்கு பலன் இல்லை

நானோ யூரியா-வை பயன்படுத்து மண்ணின் வளத்தை காத்திடுங்கள்

English Summary: Vaccine 3rd dose, first registration starts today: New facility online Published on: 08 January 2022, 01:27 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.