1. மற்றவை

பண்டிகைகளை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் விற்பனை கண்காட்சி ஏற்பாடு மற்றும் பல தகவல்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya

கடந்த திங்கள் 19 அன்று முதல் சாம்பா சாகுபடிக்காக அணைக்கரை கீழணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். மேலும் இது குறித்து அவரின் பதிவில், இதன் மூலம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 93 ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடி செய்ய பயன்படுவதோடு வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுகளில் நீர் தேக்கப்பட்டு சுமார் 120 கிராமங்கள் நிலத்தடி நீர் உயரவும் வழி வகை செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

2.TNAU விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த பயிற்சியை நடத்துகிறது

தமிழக விவசாயிகள், பெண்கள், இறுதியாண்டு மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் நலனுக்காக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம் ஐந்து நாட்கள் (5) வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சியை நடத்துகிறது. விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள், தயாரிப்பு தேர்வு, ஆவணங்கள், தளவாடங்கள், சந்தைப்படுத்தல், ஆதாரம் மற்றும் விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், இப்பயிற்சி கவனம் செலுத்தும். பயிற்சியானது 2022 செப்டம்பர் 26 முதல் 30 வரையில் TNAU, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கு, eximabdtnau@gmail.com மற்றும் business@tnau.ac.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது தொலைபேசி 0422-6611310 மற்றும் 9500476626 என்ற எண்ணையும் தொடர்புக்கொள்ளலாம்.

3.நவராத்திரியை முன்னிட்டு கதர் வாரியம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை தொடக்கம்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்வாரியம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு சென்னை குறளகத்தில், கொலுபொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கொலு பொம்மையுடன், கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த விற்பனை மற்றும் கண்காட்சியை, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார். கொலு பொம்மை, ‘காதி கோல்டு’ என பெயரிட்ட சிறுதானியங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்தார். சிறுதானியங்களான தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் மூங்கில் அரிசி உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ‘காதி கோல்டு’ என்ற பெயரில் அரை கிலோ கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் நிரப்பி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சிவகங்கை மாவட்டம், கண்டணூர் அலகில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக ‘காதி திரவ சலவை சோப்பு’ எனும் புதிய சலவை சோப்பும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

4.குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி - மத்திய அரசு

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது. இதைத் தொடர்ந்து உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்தது. இந்த உத்தரவு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், தற்போது சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

5.பண்டிகைகளை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் விற்பனை கண்காட்சி ஏற்பாடு

இன்று புதுதில்லியில் வைகை எனப்படும் தமிழ்நாடு இல்லத்தில், கோ-ஆப்டெக்ஸின் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரசிநிதி திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இல்லம் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, உள்ளுரை ஆணையர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் 24ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

தோட்டக்கலையின் இயந்திரமயமாக்கல் திட்டம்: டிரேக்டர் மற்றும் பவர் டில்லருக்கு மானியம்

SSC(CGL) தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த வாட்ஸப் எண்ணை அணுகுங்கள்!

English Summary: Cooptex's sales fair arrangement and more information on the occasion of festivals Published on: 22 September 2022, 01:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.