1. மற்றவை

இந்தியாவில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியும?

R. Balakrishnan
R. Balakrishnan
Electric Vehicles in India

இந்தியாவில் இப்போது பெட்ரோல் - டீசல் விலையேற்றம் என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையைப் பெட்ரோலுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. இதனால் நிறையப் பேர் பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோல புதிதாக வாகனங்கள் வாங்க நினைப்பவர்களின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles)

இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் இப்போது 13 லட்சத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான FAME திட்டத்தின் கீழ் இந்தியாவின் 68 நகரங்களில் மொத்தம் 2,877 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து நிதின் கட்கரி வெளியிட்ட புள்ளி விவரங்கள் ஆந்திரா, லட்சத்தீவுகள், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்த எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை பதிவு அடிப்படையில் 27,25,87,170 ஆக உள்ளது. இது உலகின் 209 நாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 13.24 சதவீதமாகும்.

மேலும் படிக்க

பஜ்ஜி சுட்ட எண்ணெயில் கார் ஓடுது: அசத்தும் சாதனையாளர்!

பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: மீண்டும் வருகிறது யமஹா RX 100!

English Summary: Do you know the number of electric vehicles in India? Published on: 21 July 2022, 05:15 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.