தற்காலத்தில் வங்கியில் FD போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகச் சேமிப்பு என்பது அனைவரது வாழ்விலும் வேண்டுகின்ற அத்தியாவசிய ஒன்றாகும். இந்நிலையில் பலரும் அவரவர் வங்கிகளில் FD-யை போடுகின்றனர். அவ்வாறு போடுவதற்கு முன் எந்த வங்கியில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து அதன்பின்பு FD-யினைச் சேமியுங்கள். இதைக் குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
பொதுவாக அனைத்து வங்கிகளிலும் FD கணக்குகளின் முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் எனும் அளவு வரை இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும்.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
இந்தியாவில் நிலவி வருகின்ற பணவீக்கம் வங்கிகளின் FD கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் PNP, SBI, IDFC, ஃபர்ஸ்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட பல முன்னணியில் இருக்கும் வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
ஆகவே, இந்த தருணத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல எதிர்காலத்தை முதலீட்டாளர்கள் பெறுவார்கள் என்பதி ஐயமில்லை. அதிலும் குறிப்பாக, மூத்த குடிமக்கள் அதிக நன்மையை பெறுகிறார்கள் என்பது கூடுதல் நன்மை.
தற்போது வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், முன்னணி வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை கீழ் பார்க்கலாம்.
மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ)
கடந்த ஜூன் 14ம் தேதியன்று, நாட்டின் மிகப்பெரிய கடன்களை வழங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. வங்கி 211 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை 3 ஆண்டுகளுக்கும் குறைவாக உயர்த்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி)
1 முதல் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ரூ. 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு நிதிகளுக்கு பிஎன்பி வங்கி 10 முதல் 20 பிபிஎஸ் வரை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் 4 ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி
கடன் வழங்கும் தனியார் துறை நிறுவனமான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியானது, 1 முதல் 5 ஆண்டுகள் வரை மற்றும் ரூ. 2 கோடிக்கும் குறைவான முதிர்வுகள் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஜூலை 1, 2022 முதல் உயர்த்தப்பட்டிருக்கின்றது.
மேலும் படிக்க: TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
கோடக் மஹிந்திரா வங்கி
கடன் வழங்கும் தனியார் துறை நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கியானது, ஜூலை முதல் தேதியில் சில தவணைக்காலங்களுக்கான வட்டி விகிதங்களை 10 பிபிஎஸ் அதிகரித்தது. 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதிர்ச்சியடையும் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, வங்கி இப்போது அதிகபட்சமாக 5.90 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
கனரா வங்கி
கடந்த ஜூன் 23 அன்று, கனரா வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி அமைத்தது. இந்த வங்கி தற்போது மக்களுக்கு 2.90 சதவிகிதம் முதல் 5.75 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 2.90 சதவிகிதம் முதல் 6.25 சதவிகிதமும் வட்டி விகித வரம்பை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அதிக வட்டியில் லாபம் தரும் வங்கிகளில் சேமித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!